இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்   

by Editor / 31-10-2023 09:17:45am
இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்   


தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வசம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

பெரு நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க ஒப்புதல் அளிப்பது, மேல்முறையீடு செய்துள்ளோரில் தகுதியானவர்ளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது போன்றவற்றிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இன்று நடைபெறும்  அமைச்சரவை கூட்டம் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும்? வடகிழக்கு பருவமழை ஏற்பாடு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க கூடும்என  வெளியாகியுள்ளன.

 

Tags : இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்   

Share via