போக்சோ வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு.

by Admin / 30-09-2026 02:57:52pm
போக்சோ வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழக அரசு இந்த வழக்கை விசாரிக்க 4 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை  4 நாட்களுக்கு முன்பு தான்  அமைத்துள்ளது.  அனைத்து ஆதாரங்களையும் திரட்ட அந்த குழுவிற்கு அவகாசம் வழங்க வேண்டும் .

அதனால்,. சிபிஐ விசாரணைக்கு உடனடித் தேவை இல்லை என்று மறுத்த நீதிமன்றம்,விசாரணை குறித்த அறிக்கையை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. 

 

Tags :

Share via
Logo