திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த மத்திய புலனாய்வுத் துறையினர்

by Editor / 30-07-2022 05:02:40pm
திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவனை கைது செய்த மத்திய புலனாய்வுத் துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவனை மத்திய புலனாய்வுத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூரில் நீலிகொல்லை  பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள்.10 பேர் கொண்ட மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேலூர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திவருகின்றனர். கைதாகியுள்ள அனீஸ்  லண்டன்  மொரோக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கலியிடம் இணையதளம் மூலம் பேசியதாக கூறப்படும் நிலையில். அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo