திருச்செந்தூர் கடலில் விழுந்த 5 பவுன் தாலிசங்கிலியை மீட்ட சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர்,

by Editor / 26-12-2021 07:45:30pm
திருச்செந்தூர் கடலில் விழுந்த 5 பவுன் தாலிசங்கிலியை  மீட்ட   சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு  குழுவினர்,

திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த மதுசூதனன்,இவர் தனது மனைவி அங்கையர்கன்னியுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த 24ஆம் தேதி  சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்திற்கு முன் கடலில் புனித நீராடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கையர்கன்னியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் கடலில் தவறி விழுந்து விட்டது. நேற்று முன்தினம் முழுவதும் கடலில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கிவிட்டனர்.இதனைத்தொடர்ந்து 
திருச்செந்தூரை சேர்ந்த ஜான் மற்றும் முருகன் ஆகியோர் தலைமையில் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் சுமார் 50 பேர் தாலி செயினை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் தேடி தாலி செயினை கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அங்கையர்கன்னியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினரை போலீசார், பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டினர்.

திருச்செந்தூர் கடலில் விழுந்த 5 பவுன் தாலிசங்கிலியை  மீட்ட   சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு  குழுவினர்,
 
Tags :

Share via