கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும்  ஆசிரியர்களுக்கு விருது: அரசு முடிவு 

by Editor / 29-07-2021 01:45:21pm
கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும்  ஆசிரியர்களுக்கு விருது: அரசு முடிவு 

 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றறை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புக்கள் கல்வித் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. 
அந்தவகையில் தமிழக அரசு சார்பில் கல்வித் தொலைகாட்சி (Kalvi Television) மூலம் மாணவர்களுக்கு பாடம் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை, மாணவர்கள் இல்லங்களில் முறையாக கவனிக்கின்றனரா என்பது குறித்து மாணவர்களின் வீடுகளுக்கேச் சென்று கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது.,
அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழலில், அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது. மேலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஆர்வமுடன் கல்வித் தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்களா எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். அப்படி சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என  அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via