ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்

by Staff / 05-11-2023 04:54:34pm
ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்க நாகாக்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது. இது ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார். நாய்க்கறி தின்னும் நாகலாந்து காரனே இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டிய பொழுது, உப்பு போட்டு தின்னும் நாமும் இந்த ஆளுநரை ஓட விடுவோம் என ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார்.
 

 

Tags :

Share via