வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 90 ஆயிரம் பணம் மோசடி

by Staff / 02-04-2023 01:39:02pm
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 90 ஆயிரம் பணம் மோசடி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக நண்பர் மூலம் சிவகங்கையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்பும் தொழில் செய்து வரும் உலகுசாமியை (45) சில மாதங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார்.  அதற்கு இளைஞரிடம் உலகுசாமி ரூ. 1. 13 லட்சம் வாங்கிக் கொண்டு, விசா மற்றும் வேலை உரிமத்தை வழங்கினார்.அவற்றை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்குச் சென்ற இளைஞருக்கு விசாவும், வேலை உரிமமும் போலி என்பது தெரிய வந்தது.  இதையடுத்து, உலகுசாமியிடம் பணத்தை திருப்பி தருமாறு இளைஞர் கூறினார். இதைத் தொடர்ந்து, ரூ. 23 ஆயிரம் வரை இளைஞர் பெற்றதாகக் கூறப்படுகிறது.ஆனால், ரூ. 90 ஆயிரத்தை தராமல் உலகுசாமி ஏமாற்றுவதாக தஞ்சாவூர் சைபர் குற்ற காவல் பிரிவில் இளைஞர் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து உலகுசாமியை சனிக்கிழமை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo