மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.

by Editor / 06-11-2023 10:09:34am
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் சேவை கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கல்லார் - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் பாறைகள் விழுந்து சேதமான காரணத்தால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து!

 

Tags : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.

Share via