கோஷ்டி மோதல்: 7பேர் கைது..

by Staff / 20-11-2023 05:31:55pm
கோஷ்டி மோதல்: 7பேர் கைது..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்களில் பயணியரிடம், மர்ம கும்பல் மொபைல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த திருடர்கள், வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் மதுபோதையில், 'எங்க ஏரியாவுல எதுக்கு திருட வறீங்க' என, இரு கும்பலாக கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பின் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, கார்த்திக், தீனதயாளன், தனுஷ், விஜி, பவுல்ராஜ், ஷாஜகான், 26, ஆகிய ஏழு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via