அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது : அமைச்சர் மனோ தங்கராஜ்

by Staff / 25-11-2023 04:24:19pm
அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது : அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் பால் விவகாரத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் மீது தொடர் விமர்சனம் வைத்து வருகிறார். இந்தநிலையில், வடநாட்டு நிறுவனங்களுக்கு அண்ணாமலை கைக்கூலியாக இருப்பதால் தான் ஆவின் மீது குற்றஞ்சாட்டுவதாக மனோதங்கராஜ் கூறியிருந்தார்.

இதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி பல மக்கள் பிரச்னைகளுக்காக, நீதிமன்றம் சென்ற வரலாறு அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்? என்று மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via