மிக்ஜாம் புயல்: சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை செய்தி தொகுப்பு.

by Editor / 04-12-2023 09:25:15am
மிக்ஜாம் புயல்: சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை செய்தி  தொகுப்பு.

மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிப்பு.

 6 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. புறப்படு விமானங்கள் 10, வருகை விமானங்கள் 10 என இதுவரை 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 14, வருகை விமானங்கள் 12 என மொத்தம் 26 விமானங்கள் பல மணி நேரம் தாமதம்.

புயல் கரை கடந்துவிடும் என்பதால் நாளை விடுமுறை அறிவிக்க வேண்டிய தேவை இருக்காது - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.


சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியது.
கட்டடத்திற்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்.2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு.கிண்டி காவல்துறையினர் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

கனமழை மற்றும் மழைநீர் தேக்கம் காரணமாக பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை மூடல்; பொதுமக்கள் யாரும் அவ்வழியே பயணிக்கவேண்டாம்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை.

சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்ற பதிவாளர்.

சென்னை- பல்வேறு நீர் நிலைகளில் பல நீர்  முதலைகள்  உள்ளன. புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள்அச்சப்பட தேவையில்லை.வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
- பெருங்களத்தூர் ஏரி அருகே முதலை தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை விளக்கம்.


 

 

Tags : மிக்ஜாம் புயல்: சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

Share via