சடக்கென காரிலிருந்து இறங்கிய முதல்வர்-ஓடிவந்த அதிகாரிகள்

by Editor / 22-10-2022 09:16:10am
சடக்கென காரிலிருந்து இறங்கிய முதல்வர்-ஓடிவந்த அதிகாரிகள்

சென்னை அண்ணாசாலை, டி.எம்.எஸ். மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்திய  முதல்வர் சடக்கென இறங்கி  விபத்து நடந்த இடத்திற்கு சென்று, காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார்.முதல்வரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags :

Share via