மிக்ஜாம் புயல்: பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்

by Staff / 06-12-2023 01:36:28pm
மிக்ஜாம் புயல்: பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்

‘மிக்ஜாம்’ புயலால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘மிக்ஜாம்’ புயலால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் குடும்ப உறவுகளை இழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது ஆறுதலை தெரிவிக்கிறேன். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிராத்திக்கிறேன். அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அயராது உழைத்து வருகின்றனர். மேலும் நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணியை தொடரவும் என அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo