மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு பாரதப்போரில் கீதா உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா..

by Admin / 15-12-2023 08:37:05am
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு பாரதப்போரில் கீதா உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா..

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு பாரதப்போரில் கீதா உபதேசம் செய்தார் கிருஷ்ணா பரமாத்மா.,

12 மாதங்களில் சிறப்புக்குரிய மாதமாக மார்கழியை சொல்வார்கள். மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நீராட போதுமினிர் என்ற ஆண்டாள் திருப்பாவையில் இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கும் நல்ல  விளைவுகள் நிகழ்வதற்கும் ஆக காலையில் எழுந்து குளித்து முடித்து நெய்யும் பாலும் உண்ணாமல்  விரதம் இருந்து கிருஷ்ண பரமாத்மாவை மார்கழி மாதத்தில் வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் அவர் வழங்குவார். ஆண்டாள் திருப்பாவையில் சொல்லப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். பெண்களுக்கு மிகச் சிறந்த ஒரு காலமாக மார்கழி மாதத்தை கொள்ள வேண்டும். இந்த மார்கழி மாத பனி நம் உடலை மட்டுமல்ல., நம் உள்ளத்தையும் புத்துணர்ச்சி தந்து வாழ்வில் மறுமலர்ச்சி செய்யக் கூடியதாக அமையும். வாசலிலே, வண்ணக் கோலமிட்டு- சாணம் பிடித்து அதில் பூசணி பூவை செருகி ....அதிகாலையில் பஜனை பாடி செல்வது சிறப்பு குறியதாக போற்றப்படுகிறது. இது பெண்களுக்கு மட்டுமான வழிபாட்டு காலம் என்று வரையறுக்கப்பட்டாலும் அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால் செல்வமும் மேன்மையும் கிட்டும்..இந்த மாதம் முழுவதும் தமிழகம் எங்கும் இசை திருவிழா நடந்தேறுவது குறிப்பிடத்தக்கது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு பாரதப்போரில் கீதா உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா..
 

Tags :

Share via