முதுநிலை மருத்துவர்களுக்கு மாதம் ரூ. 9000 ஊக்கத்தொகை..அமைச்சர் மா. சுப்ரமணியன்

by Staff / 20-01-2024 02:14:03pm
முதுநிலை மருத்துவர்களுக்கு மாதம் ரூ. 9000 ஊக்கத்தொகை..அமைச்சர் மா. சுப்ரமணியன்

முதுநிலை மருத்துவர்களுக்கு மாத்ந்தோறும் ரூ. 9000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.முதுநிலை பட்டம் பெற்ற அரசு மருத்துவர்களுக்கு மாதந்தோறும் ₹9, 000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் மா. சுப்ரமணியத்துடன் நேற்று நடைபெற்றது. அதில் முதுகலை பட்டம் பெற்ற அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் ₹9, 000 மற்றும் பட்டயப் படிப்பு மருத்துவர்களுக்கு மாதம் ₹5, 000 எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via