வைரஸ் காய்ச்சல்; தமிழகத்தில் 282 பேர் பாதிப்பு-அமைச்சர் மா.சுப்ரமணியன்

by Staff / 15-09-2022 11:47:24am
வைரஸ் காய்ச்சல்; தமிழகத்தில் 282 பேர் பாதிப்பு-அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. எனவே ஒவ்வொரு பருவமழைக்கு பின்னரும் பரவும் காய்ச்சல் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளபட்டது என்று கூறினார்.

தமிழகத்தை பொருத்தவரை இன்புளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அரசு மருத்துவமனையில் 202 பேரும், தனியார் மருத்துவமனையில் 215 பேரும், வீடுகளில் 54 குழந்தைகள் என மொத்தம் 282 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் 129 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் H1N1 என்ற காய்ச்சல் வகை யாருக்கும் இல்லை. 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. 121 குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கமும் மற்றும் முகக்கவசம் அணியும் பழக்கத்தையும் கூற வேண்டும் என்று கூறினார்.

அனைத்து அரசு மருத்துவமனைக்கும் சுற்றிக்கை விடப்பட்டு உள்ளது. அதில் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் எச்சரிக்கை வேண்டும். மருந்து கடைகளிலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் H1N1 போன்ற வைரசுக்கு மருந்து கொடுக்க கூடாது.

தமிழகத்தில் மொத்தம் 282 குழந்தைகள் H1N1 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலை பொருத்தவரை 3 நாட்களில் சரியாகிவிடும், பயப்பட தேவை இல்லை என்று கூறினார்.

எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் படுக்கை எண்ணிக்கை 837 உள்ளது. சென்னை எழும்பூர் மருத்துவமனையில் H1N1 பாதிப்பு கிடையாது. பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பள்ளிகளுக்கும் இது சம்மந்தமாக சுற்றறிக்கை விடப்பட்டு உள்ளது. மழை காலம் என்பதால் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். H1N1 என்றால் பன்றி காய்ச்சல் கிடையாது. தமிழ்நாட்டில் டெங்குவால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via