தாமரை மலர்கிறது - குஷ்பு மகிழ்ச்சி

by Staff / 03-12-2023 02:12:39pm
தாமரை மலர்கிறது - குஷ்பு மகிழ்ச்சி

ஐந்து மாநிலங்களில் நடைப்பெற்ற தேர்தல்களில் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று (டிசம்பர் 3) எண்ணப்பட்டு வருகிறது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலையிலும் சத்தீஸ்கரில் பாஜக - காங்கிரஸ் சமநிலையிலும் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையிலும் உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தனது சமூவலைதளப்பக்கத்தில் தாமரை மலர்கிறது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Tags :

Share via