ரூ.234 கோடிக்கு மேல் இட்லி ஆர்டர் செய்த இந்தியர்கள்

by Staff / 31-03-2023 05:29:04pm
ரூ.234 கோடிக்கு மேல் இட்லி ஆர்டர் செய்த இந்தியர்கள்

மார்ச் 30 சர்வதேச இட்லி தினம். தென்னிந்திய உணவுப்பட்டியலில் நீங்காத இடம்பிடித்துள்ள இட்லி, இப்போது உலகம் முழுவதும் பிரபலமான உணவாக உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் 12 மாதங்களில் ஸ்விக்கி மூலம் ரூ.6 லட்சம் மதிப்பிலான இட்லியை ஆர்டர் செய்துள்ளார். ஒரு வருடத்தில் ஸ்விக்கி மூலம் இந்தியர்கள் ஆர்டர் செய்யும் இட்லியின் மதிப்பிடப்பட்ட விலை 234 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. தென்னிந்திய உணவான இட்லி பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

 

Tags :

Share via