தேர்தல் கூட்டணி... பாமகவின் முடிவை அறிவித்த ராமதாஸ்

by Staff / 01-02-2024 01:23:39pm
தேர்தல் கூட்டணி... பாமகவின் முடிவை அறிவித்த ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடாது, கூட்டணியில் இணைந்து தான் போட்டியிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இன்று பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராமதாஸ், 'நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாமக தயாராக உள்ளது. தனித்து போட்டியிட்டால் ஏழு இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். தற்போது தனித்து போட்டியிட கட்சியினர் தயாராக இல்லை. கூட்டணி அமைத்து தான் போட்டியிடப் போகிறோம். கூட்டணியைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார்.

 

Tags :

Share via