‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை

by Staff / 04-02-2024 04:32:50pm
‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை

கடந்த 2022 வது ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து எம்.. மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்ததிரைப்படம்  கடைசி விவசாயி.  இந்த படத்தில் வயதான விவசாயி ஒருவரின் தங்கையாக நடித்தவர் தான் காசாம்மாள்.. இவர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர். இவரது மகன் நாமக்கோடி மது பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி மது அருந்துவதற்காக தன்னுடைய தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை காசாம்மாளிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்ட பொழுது அவர் தர மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பெற்ற தாயை அடித்து கொலை செய்த நாம கோடியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..

‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை
 

Tags :

Share via