வெற்றி துரைசாமி மீட்பு பணி.. வெளியான தகவல்

by Staff / 10-02-2024 01:19:03pm
வெற்றி துரைசாமி மீட்பு பணி.. வெளியான தகவல்

இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்ந்து வருகிறது. விபத்து நடந்தது எப்படி என்பது தொடர்பான டெமோவை இமாச்சல் பிரதேச போலீசார் செய்து பார்த்து வருகின்றனர். வெற்றி துரைசாமியை போல பொம்மையை வடிவமைத்து, நதியில் அனுப்பி போலீசார் டெமோ பார்த்து வருகின்றனர். நதியின் ஓட்டத்தில் எந்த வழியாக சென்றிருக்க கூடும் என்ற அடிப்படையில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via