விர்ரென உயர்ந்த வெல்லம் விலை.

by Editor / 15-02-2024 09:32:59am
விர்ரென உயர்ந்த வெல்லம் விலை.

 பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏலச் சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் அதிக விலைக்கு ஏலம்போனது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனி, புதன்கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 4,500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 1,500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,180 வரைக்கும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,200 வரைக்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 4,500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 1,500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரைக்கும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,220 வரைக்கும் ஏலம்போனது.

 

Tags : விர்ரென உயர்ந்த வெல்லம் விலை

Share via