பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

by Staff / 18-02-2024 02:46:26pm
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்

பெங்களூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டங்களுக்கு குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலி சார் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தனிப்படை போலீசார் ரோடு எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த சொகுசுகரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்தது காரை சோதனையிட்டனர். காரில் குட்கா மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து குட்க்கா பொருட்களை கடத்தி வந்த இருவரையும் கைது செய்து அவர்கள் வந்த வாகனத்தை பறிமுதல் செய்து எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா விடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து விசாரித்த போது மஹாராஸ்ட்ராவை சேர்ந்த நாரியன்சிஹா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ராமாராம் என்பது தெரியவந்தது. அவர்கள் கடத்திவந்த ரூ. 5 இலட்சம் மதிப்பிலான குட்காபொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து குட்கா கடத்திய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

 

Tags :

Share via