முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்ஆளுநர் .ஆர்.என்.ரவியை சந்தித்தாா்.

by Admin / 02-06-2022 10:41:56pm
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்ஆளுநர் .ஆர்.என்.ரவியை சந்தித்தாா்.

சென்னையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது  நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.21 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறும், நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்காக ஆளுநரை நேரில் சந்தித்து  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது  நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.21 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறும், நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்காக ஆளுநரை நேரில் சந்தித்து  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பின்பொழுதுநீா் வளத்துறை அமைச்சா் துரை முருகன்,உயர்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி,தொழிற்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு உடனிருந்தனா்.

 

Tags :

Share via