அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்களை கேட்டு தொந்தரவு கொடுத்த ஊழியர்

by Admin / 11-03-2024 01:46:05pm
அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்களை கேட்டு தொந்தரவு கொடுத்த ஊழியர்

அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்களை கேட்டு தொந்தரவு கொடுத்த ஊழியர்...புதுச்சேரி போல் இங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ... கதறி அழுத சிகிச்சைக்கு வந்த பெண்...புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பெண் வேதனை....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரைச் சேர்ந்தவர் 27வயது பெண்மணி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் தற்பொழுது கணவரிடம் விவகாரத்து பெற்று, பிரிந்து தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அந்த பெண் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த பெண்மணிக்கும் தோல் தொடர்பான பிரச்சினை இருந்த காரணத்தினால் அரசு மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவரிடம் மருத்து ஆலோசனை பெற்றுள்ளார். அந்த பெண் மருத்துவரின் ஆலோசனையின் படி இரத்த பரிசோதனை மற்றும் ஹெச்வி பரிசோதனை செய்ய சென்றுள்ளார். ஹெச்வி பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் 12ம் எண் அறையில் பதிவு செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்டீபன் என்கின்ற ஊழியர் அந்த பெண்ணிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டது மட்டுமின்றி, அந்தரங்கம் தொடர்பான கேள்விகளை கேட்டதாகவும், தவறான எண்ணத்துடன் அந்த பெண்ணை பார்த்தகாகவும் கூறப்படுகிறது. மேலும் தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னால் மட்டும் பதிவு செய்து தருவேன் என்று நீண்ட நேரம் தர மறுத்துள்ளார். இதையெடுத்து அந்த பெண் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டே அறையில் இருந்து வெளியேறி சென்றது மட்டுமின்றி, இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுதாவிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் முறையாக புகாரும் எழுதி கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட நடவடிக்கை எடுத்த குறித்து தகவல் தெரிவிப்போம் என்று கூறி அனுப்பி விட்டதாகவும், தற்பொழுது வரை எவ்வித விசாரணையோ நடவடிக்கையோ எடுக்கவில்லை என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் தனக்குள்ள பிரச்சினைகள் குறித்து பெண் மருத்துவரிடம் எடுத்துக்கூரிய பின்னர் தான் சில பரிசோதனைகளை செய்ய அறிவுறுத்தினர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை சீட்டில் தெளிவாக எழுதி இருந்தார். இருந்த போதிலும் 12ம் அறையில் இருந்த ஸ்டிபன் என்கிற ஊழியர் மீண்டும், மீண்டும் பிரச்சினை குறித்து கேட்டு கொண்டே இருந்தார். மருத்துவரிடம் கூறிவிட்டேன். பதிவு மட்டும் செய்து கொடுங்கள் என்று சொன்னதற்கு அவர் கோபமாக பேசியது மட்டுமின்றி, தவறான பார்வையில் பார்த்தது மட்டுமின்றி, தவறான எண்ணத்துடன் பேசியதால் தனக்கு அழுகை வந்ததது மட்டுமின்றி இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், என்னை போன்ற பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஊழியர் பலரிடமும் இது போன்று தான் நடந்துள்ளதாகவும், முதன் முறையாக நான் தான் புகார் கொடுத்து இருப்பதாக அங்குள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர். எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், இவரை போன்ற நபர்களால் தான் புதுச்சேரி சம்பவம் போன்று நடைபெற்று வருவதாக கண்ணீருடன் கூறினார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.ஒரு பெண் தனது பிரச்சினைகளை பெண் மருத்துவரிடம் கூறிய பின்னர் மீண்டும் வேண்டுமென்றே ஆண் ஊழியர் கேட்டது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இது போன்ற இடங்களில் பெண்களிடம் பேச பெண் ஊழியரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

பேட்டி : பாதிக்கப்பட்ட பெண்

 

அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்களை கேட்டு தொந்தரவு கொடுத்த ஊழியர்
 

Tags :

Share via