யுக புருஷர் பிரதமர் மோடி: நடிகர் சரத்குமார் பெருமிதம்

by Staff / 15-03-2024 04:02:09pm
யுக புருஷர் பிரதமர் மோடி: நடிகர் சரத்குமார் பெருமிதம்

இன்று கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் கட்சியில் இணைந்த நடிகர் சரத்குமார் "மீண்டும் மோடி", "வெல்கம் மோடி" என தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு என்ற பாரதியின் வைர வரிகளை நெஞ்சிலிருத்தி, இந்த மொழியையும் பண்பாட்டையும் காக்க வந்த யுகபுருஷரான பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழி நடப்போம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via