பாஜக பெயரில் போலி வேட்பாளர் பட்டியல்...?

by Editor / 18-03-2024 11:54:53pm
பாஜக பெயரில் போலி வேட்பாளர் பட்டியல்...?

பாஜக தமிழக வேட்பாளர் பட்டியல் என்ற பெயரில்,தென் மாவட்டங்களை முக்கியத்துவப்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஒரு பட்டியல் வெளியானது.

சென்னை தெற்கு - தமிழிசை சௌந்திரராஜன்,
கோயம்புத்தூர் - ஏ.பி. முருகானந்தம்,
கரூர் - அண்ணாமலை குப்புசாமி,
திருச்சிராப்பள்ளி - ஆசிர்வாதம் ஆச்சாரி,
சிதம்பரம் - தடா பெரியசாமி,
சிவகங்கை - சத்தியானந்தன்,
ராமநாதபுரம் - எம். முருகானந்தம்,
தூத்துக்குடி - ராதிகா சரத்குமார்,
தென்காசி - ஆனந்தன் அய்யாசாமி,
திருநெல்வேலி - நயினார் பாலாஜி,
கன்னியாகுமரி - எஸ்.விஜயதரணி.

இவ்வாறு அந்தப் பட்டியலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வேட்பாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால், இந்தப் பட்டியல் போலியானது என்று தமிழக பாஜக சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.

 

 

Tags : பாஜக பெயரில் போலி வேட்பாளர் பட்டியல்...?

Share via