தென்காசி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் வேட்புமனு தாக்கல்

by Staff / 25-03-2024 03:34:24pm
தென்காசி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் வேட்புமனு தாக்கல்

தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஜான் பாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பாஜக, தமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.இந்த தொகுதியில் திமுக சார்பில் ராணி, அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

Tags :

Share via