தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில்  7 நாட்களுக்கு ரத்து .

by Editor / 05-08-2021 04:48:27pm
தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில்  7 நாட்களுக்கு ரத்து .


இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ஏழு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பிரிவில் ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது தட்டப்பாறை - மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 
எனவே தட்டப்பாறை மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பாதையுடன் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இணைப்பு பணிகளை தொய்வில்லாமல் தொடர்வதற்காக  மைசூர் - தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் ஏழு நாட்களுக்கு கோவில்பட்டி - தூத்துக்குடி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை மைசூரிலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06236 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயிலும் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயிலும் கோவில்பட்டி - தூத்துக்குடி ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via