அம்மா உணவகம் அமைக்கப்படும் என பாஜக வாக்குறுதி

by Staff / 11-04-2024 02:38:59pm
அம்மா உணவகம் அமைக்கப்படும் என பாஜக வாக்குறுதி

ஏப்ரல் 19 சிக்கிம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநிலத்திற்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பெண்களால் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்று மலிவு விலைக்கு சாப்பாடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும், இளைஞர்களுக்கு அதிகாரம், சுற்றுலா துறை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

 

Tags :

Share via