பிரதமர் இல்லத்தை வாடகைக்குவிட பாகிஸ்தான் அரசு. முடிவு

by Editor / 07-08-2021 09:19:20am
பிரதமர் இல்லத்தை வாடகைக்குவிட பாகிஸ்தான் அரசு. முடிவு

பாகிஸ்தான் அரசு மிகுந்த நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. நிதி நிலைமையை ஈடுகட்ட முடியாமல் அந்த அரசு மிகவும் தவித்து வருகிறது. நிதி நிலையை சரி செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசு இல்லத்தை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை அந்நாட்டு அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கல்வி, கலை மற்றும் கலாச்சார விழாக்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த பிரதமர் இம்ரான் கானின் இல்லத்தைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை மோசமாக இருக்கும் சூழலில் பிரம்மாண்ட மாளிகைகளில் பிரதமர் மட்டுமல்ல ஆளுநர்களும் பிரம்மாண்ட அரசு இல்லங்களில் வசிக்கப் போவதில்லையாம்.பிரான்ஸ் நாட்டு நிதி கட்டுப்பாடு அமைப்பு பாகிஸ்தானை க்ரே பட்டியலில் வைத்துள்ளது. இதனால், உலக நாடுகளின் உதவி, கடன் என எதுவும் கிடைக்காமல்  சிக்கித் தவித்து வருகிறது பாகிஸ்தான் அரசு.

 

Tags :

Share via