தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

by Editor / 08-05-2024 10:33:15am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

தமிழ்நாட்டில் தங்கம் விலை சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ரூ.45,000-க்கு விற்கப்பட்டு வந்த தங்கம், கிடுகிடுவென விலை உயர்ந்து சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்தது. தற்போது ரூ.53,000 என்ற விலையில் சிறிய மாற்றத்துடன் விற்பனையாகிறது. இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,630-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.88.50-க்கும், 8 கிராம் ரூ.708-க்கும் விற்பனையாகிறது.

 

Tags : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

Share via