குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானர முட்டியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழப்பு - 

by Admin / 14-06-2024 12:36:13am
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானர முட்டியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழப்பு - 

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானர முட்டியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழப்பு - 

 கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் கடந்த 20 வருடமாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாரியப்பனுக்கு,, அவரது தாய் வீரம்மாள்,  கற்பக லட்சுமி என்ற மனைவியும்,, நிர்மலா என்ற மகளும்,, கதிர்நிலவன் என்ற மகனும் உள்ளனர்.மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துவிட்டு மாரியப்பன் சென்றது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வானர முட்டியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர் உயிரிழப்பு - 
 
Tags :

Share via

More stories

Logo