“2026ல் தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைப்போம்" - சசிகலா

by Staff / 16-06-2024 04:50:37pm
“2026ல் தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைப்போம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் விலகியது தவறுதான். அதிமுகவில் சுணக்கம் என்று ஒன்று இல்லை. தொண்டர்கள் எங்கேயும் செல்லவில்லை. இங்கேயே தான் இருக்கிறார்கள். விரைவில் அதிமுகவை ஒன்றிணைத்து வருகிற 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காட்டிய வழியில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றார்.

 

Tags :

Share via