போர் யானைகளுடன் வாகை மலர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

by Editor / 22-08-2024 09:45:17am
போர் யானைகளுடன் வாகை மலர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியில் இரட்டை யானை, வாகை மலருடன் தவெக கொடி இரு வண்ணங்களில் இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி பனையூர் கட்சி அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெறபெற்றது.அக்கட்சியின் தலைவர் விஜய் கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் மாவட்ட தலைவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நீலாங்கரை கேஷுவரீவனா டிரைவ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு அனுமதி இன்றும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சிக் கொடி மட்டுமல்லாது கட்சிக்கான பாடலையும் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து இருக்கிறார். மேலும், தமிழக வெற்றி கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்த பின்னர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஏற்க உள்ள உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

 

Tags : போர் யானைகளுடன் வாகை மலர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்!

Share via

More stories

Logo