மக்காச்சோளத்திற்கு கிராக்கி-விவசாயிகள் மகிழ்ச்சி

by Admin / 14-08-2021 01:53:26pm
மக்காச்சோளத்திற்கு கிராக்கி-விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடி மாத தொடக்கத்தில் இருந்து மாசி பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

கால்நடை தீவனத்திற்கு முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் விளங்குகிறது. இதனால் இதற்கான தேவை ஆண்டு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது.

மக்காச்சோளம் கடந்த மாசி பட்ட சாகுபடியின் போது குவிண்டால் ரூ.1,600ஆக இருந்தது. அப்போது தை பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பெருமளவில் அறுவடை செய்யப்பட்டதால் குறைந்த விலையே கிடைத்தது.

மாசிப்பட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சாகுபடி பரப்பு குறைந்தது. சில மாதங்களாக இருப்பு வைக்கப்பட்ட மக்காச்சோளமே விற்கப்பட்டு வந்தது. ஆடி மாத தொடக்கத்தில்  இருந்து மாசி பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
 
தற்போது ஒரு குவிண்டால் ரூ.2,100  வரை விலை போகிறது. கூடுதல் விலை கிடைப்பதால் மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via