கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுக்க தடை-எஸ் பி அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு. கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுப்பது வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கரூர் மாவட்டத்தில், முறையாக பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு அதிக பணம் கொடுத்து வசூல் செய்து அவர்களை துன்புறுத்தி, அவர்கள் மீது கரூர் நகரம், பசுபதிபாளையம் & வெங்கமேடு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 4- எதிரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கந்து வட்டி தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண் 100 &04324-296299 என்ற எண்ணிற்கோ நேரடியாக தகவல் தெரிவிக்கலாம் என கூறி இருந்தார்.
பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத கந்துவட்டி வசூல் செய்தால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
Tags :