திருச்செந்தூர் கோயிலில் ரஜினி மகள்  வழிபாடு 

by Editor / 20-08-2021 04:50:07pm
 திருச்செந்தூர் கோயிலில் ரஜினி மகள்  வழிபாடு 

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்தபடத்தின் தனது பகுதிகளை நடித்து முடித்துவிட்டார். இந்ததிரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனிடையேசிலநாட்கள் ஓய்வில் இருந்தநிலையில், தன்னுடையஉடல் நலனைகருத்தில் கொண்டு அரசியலைவிட்டேஒதுங்கிவிட்டார். ரஜினிகாந்த் உடல் நலனுக்காகஅவரது 2வது மகள் சௌந்தர்யா, கணவர் விசாகனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். கோவிலில் காலை 10 மணிக்கு நடந்த உச்சிகால அபிஷேகத்தில் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டனர். பின்னர் கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் வழங்கி, ஆசிபெற்றனர்.

 

Tags :

Share via