பாஜக நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை ஆலோசனை

by Editor / 22-08-2021 10:10:35am
பாஜக நிர்வாகிகளை மாற்ற அண்ணாமலை ஆலோசனை

கே.அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக கடந்தஜூலை 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். பாஜக கட்சி விதிகளின்படி, மாநிலத் தலைவராக ஒருவர்நியமிக்கப்பட்டால் பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர், செயலாளர்கள், அலுவலகச் செயலாளர் போன்ற மாநில நிர்வாகிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

பாஜக மாநிலத் தலைவர் பதவி என்பது 3 ஆண்டுகளைக் கொண்டது. அண்ணாமலை இடையில் மாநிலத் தலைவராகி இருப்பதால் நிர்வாகிகளை முழுமையாக மாற்றாமல் 50 சதவீதம் அளவுக்கு மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

பாஜகவை பொருத்தவரை மாநில பொதுச் செயலாளர் பதவி என்பது மிக முக்கியமானது. அவர்கள் அனைவரும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட மாநில மையக் குழுவில் இடம்பெறுவர். தற்போது கரு.நாகராஜன், கே.டி.ராகவன், ஜி.கே.செல்வக்குமார், ஆர்.சீனிவாசன் ஆகியோர் அந்தப் பதவியில் உள்ளனர். இவர்களில் இருவரை மாநில துணைத் தலைவர்களாக நியமித்துவிட்டு, புதியவர்களை மாநில பொதுச் செயலாளர்களாக நியமிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via