காலாவதியான எல்‌.ஐ.சி.  பாலிசிகளை புதுப்பிக்க ஒரு மாத சலுகை

by Editor / 24-08-2021 04:59:44pm
காலாவதியான எல்‌.ஐ.சி.  பாலிசிகளை புதுப்பிக்க ஒரு மாத சலுகை


எல்‌.ஐ.சி. நிறுவனம்‌, தனது பாலிசிதாரர்கள்‌ தொடர்ச்சியான காப்பீட்டுப்‌ பாதுகாப்பை பெற, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க, ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இதற்காக “சிறப்பு புதுப்பித்தல்‌ முகாம்‌” ஒன்றை  அக்டோபர்‌ 22ந் தேதி வரை தொடங்கியுள்ளது.
தற்போதைய சூழ்‌நிலைக்கேற்ப டெர்ம்‌ அஷ்யூரன்ஸ்‌ மற்றும்‌ உயர்‌ காப்பீட்டு திட்டங்கள்‌ தவிர இதர பாலிசிகளுக்கு, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தை பொறுத்து தாமத கட்டணத்தில்‌ சலுகைகள்‌ வழங்கப்படுகின்றன. மருத்துவ தேவைகளில்‌ எவ்வித சலுகையும்‌ இல்லை. உடல்‌ நல காப்பீடு மற்றும்‌ மைக்ரோ காப்பீடு பாலிசிகளுக்கும்‌ தாமதக்‌ கட்டணத்தில்‌ விதிமுறைகளின்‌ படி சலுகைகள்‌ உண்டு.
இந்த சிறப்பு புதுப்பித்தல்‌ முகாம்‌ மூலம்‌ செலுத்தப்படாத முதல்‌ தவணை பிரீமிய தேதியிலிருந்து 5 வருடத்திற்குள்‌ பாலிசிகளை சில வரைமுறைகளுக்குட்பட்டு புதுப்பித்துக்‌ கொள்ள முடியும்‌.
தகுதியுள்ள பாலிசிகளுக்கு வழங்கப்படும்‌ தாமத கட்டணச்‌ சலுகை (அதிக இடர்‌ காப்பீட்டு மதிப்புள்ள பாலிசிகளான டெர்ம்‌ பாலிசிகள்‌ மற்றும்‌ பன்முகத்‌ தன்மையுடைய இடர்‌ பாசிலிகளுக்கும்‌ இந்த சலுகை கிடையாது)மொத்த செலுத்தப்பட வேண்டிய பிரீமியம் ரூ.1 லட்சம் வரை தாமத கட்டண சலுகை 20% அளிக்கப்படுகின்ற அதிகபட்ச சலுகை ரூ.2 ஆயிரமாகும்.ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை 25% வீதம் ரூ.2 ஆயிரத்து 500 ஆகும்.ரூ.3 லட்சத்து 1 மற்றும் அதற்கு மேலும் 30% ரூ.3 ஆயிரமாகும்.
பிரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியாக உள்ள ஆனால் பாலிசி காலத்தை முடிக்காத பாலிசிகள் இந்த சிற்பபு புதுப்பித்தல் முகாமுக்கு தகுதி பெறுகின்றன.
தவிர்க்க முடியாத சூழல்களால்‌ பிரீமியத்‌ தொகையை செலுத்தத்‌ தவறி, காலாவதியான பாலிசிகளை வைத்திருக்கும்‌ பாலிசிதாரர்களுக்கு இந்த "சிறப்பு பாலிசி புதுப்பித்தல்‌ முகாம்‌”உதவியாக இருக்கும்‌. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தல்‌ மூலம்‌ காப்பீட்டு பலன்களை மீட்டெடுக்கலாம்‌. எல.ஐ.சி நிறுவனம்‌ என்றென்றும்‌ தன்னுடைய மதிப்பு மிக்க மேலான பாலிசிதாரர்களையும்‌, அவர்களின்‌ காப்பீட்டு பலன்களைத்‌ தொடர விரும்பும்‌ விருப்பத்தினையும்‌ மேன்மையாக கருதுகிறது. "சிறப்பு பாலிசி புதுப்பித்தல்‌ முகாம்‌" எல்‌.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு தங்களது பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளவும்‌ மற்றும்‌ அவர்களின்‌ குடும்பத்தினருக்கு பொருளாதார பாதுகாப்பினை அளிப்பதற்கும்‌ ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இது பற்றி அறிய www.licindia.in வலைதளத்தைப் பார்க்கலாம்.

 

Tags :

Share via