குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் மேள கலைஞர் நியமனம்

by Admin / 25-08-2021 01:22:07pm
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் மேள கலைஞர் நியமனம்

குருவாயூர் கோவில் உள்பட கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

கேரளாவில் உள்ள கோவில்களில் பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி கேரளாவில் உள்ள சில  கோவில்களில் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி சன்னதியில் மேளம் வாசிக்கும் பணிக்கு  தலித் கலைஞர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

குருவாயூர் கோவில் உள்பட கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

அவர்கள்  குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழிவழியாக இந்த பணியில் நியமிக்கப்படுவார்கள். தற்போது இந்த பணி தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. கருவன்னூர் மேலப்பெருக்கல் சதீஷ் என்பவர் இப்பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து சதீஷ் கூறியதாவது:-

குருவாயூர் கோவிலில் மேள கலைஞர் பணியினை தொடங்கி விட்டேன். இந்த பணி இறைவனின் கருணையால் எனக்கு கிடைத்துள்ளது. பணியில் சேர்ந்த பின்பு கோவிலில் பணியாற்றும் சக கலைஞர்கள்  மற்றும் ஊழியர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு  தருகிறார்கள்.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

Tags :

Share via