கேரளாவில் நாளை முழு ஊரடங்கு

by Admin / 28-08-2021 03:10:53pm
கேரளாவில் நாளை முழு ஊரடங்கு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. முக்கியமாக கடந்த மாதம், வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

 அதன்பிறகு ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு அதிகமாக இருந்து வந்தநிலையிலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துவிட்டது.

கடந்த 25-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்களும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை(29-ந்தேதி) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

அதன்படி கேரள மாநிலத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தில் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பஸ்களும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags :

Share via