மனிதன் வடிவிலான ரோபோ.டெஸ்லாபோட்

by Editor / 28-08-2021 05:40:02pm
 மனிதன் வடிவிலான ரோபோ.டெஸ்லாபோட்

மனிதனுக்கு ஈடாக செயல்படக்கூடிய மனித ரோபோக்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் மனிதவடிவிலான ரோபோக்களை தயாரித்து வருவதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த மனித வடிவ ரோபோவுக்கு டெஸ்லாபோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ 5 அடி, 8 இஞ்ச் உயரம் கொண்டது.

மேலும் அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை போல நடமாடும் இந்த ரோபோக்கள் டெஸ்லா கார்களில் உள்ள கேமரா சென்சார்கள், நியூரல் நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் என்றும், மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற பணிகள், திரும்ப திரும்ப செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிடத்திற்கு சென்று உடல் உழைப்பை பயன்படுத்தி பணி செய்ய வேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு இருக்காது, அப்பணிகளுக்கு ரோபோக்கள் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via