மம்தா பானர்ஜி தலைமையிலான அணி பெயர்- மம்தா அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரேஜினகர் தொகுதி இடைத்தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிர எதிர்ப்புகளுக்கு மத்தியில், இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் தங்களது புதிய பெயர்கள் மற்றும் சின்னங்களுக்கான விருப்பப் பட்டியலைச் சமர்ப்பித்ததை அடுத்து, தேர்தல் ஆணையம் அவர்களுக்குப் புதிய பெயர்களையும் சின்னங்களையும் தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.
மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மின்னஞ்சல் மூலம் தங்களது விருப்பங்களை சமர்ப்பித்திருந்தது. மம்தா அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி என்றும் கால்பந்து சின்னமாக கால்பந்தும் ஒதுக்கப்பட்டுள்ளது.அரூப் ராய் மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணிக்கு டெமாக்ரடிக் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி என்றும் சின்னமாக கடித உறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சின்னங்கள் ஒதுக்கீட்டுச் சட்டம் 1968-இன் பிரிவு 15-ன் கீழ் கட்சியின் அதிகாரப்பூர்வ உரிமை யாருக்கு என்பது குறித்த இறுதி விசாரணை முடிவடையும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த இரு பிரிவினரும் மேற்கு வங்கம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளாகவே செயல்படும்.
Tags :


















