வெற்றிகழக ஆட்சியில் தொடர்ந்து மின்வெட்டு ;தேர்தல் வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்றவில்லை- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.
மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாம் பரப்புரையில் மேற்கொள்ளும் பொதுக்கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாக திறனை குற்றம் சாட்டி பேசி வருகிறார். இந்த வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மற்றும் திட்டமிடாத மின்வெட்டு தினசரி பிரச்சினையாக மாறி உள்ளதாகவும் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாக்களிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வுகளை அவர் சுட்டிக் காட்டியதோடு அமைச்சர்களுக்கு இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் தமிழக வெற்றிக்கழக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் வெறும் விளம்பர அரசியலிலும் முந்தைய அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதிலும் மட்டுமே தமிழக வெற்றிக்கழக அரசு கவனம் செலுத்துகிறது என்றும் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பெரும் அளவில் கடன்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தின் நிதி நிலை மோசமடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் தமிழக வெற்றிக்காக அரசுக்கு எதிரான விஷயங்களைஅவர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்.
திமுக அதிமுக இரு கட்சிகளும் ஆளும் கட்சிக்கு எதிராக மின்வெட்டு போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பரப்புரை மேற்கொள்வதால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
Tags :



















