யூபிஐ  பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது ..

by Admin / 29-09-2026 01:24:23am
யூபிஐ  பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது ..

அண்மையில் மத்திய அரசு ரூபாய் 2000 க்கு மேல் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிக ரீதியான யூபிஐ  பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது .

இது குறித்து மத்திய அரசு மத்திய ரிசர்வ் வங்கி தேசிய பண பரிவர்த்தனை கழகம் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் 0. 4 சதவீதம் எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்க அறிக்கையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  இந்த யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்  வணிகர்களிடம்  இருந்து தான் வசூலிக்கப்படும்  என்றும் பொதுமக்கள் ,நுகர்வோர்  செலுத்தும்  பணத்திற்கு   இது  பொருந்தாது  என்றும்  இந்த  கட்டணத்தை வாடிக்கையாளர்கள்  மீது  சுமத்த கூடாது என்றும் மத்திய அரசு வங்கிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்றும் அதிகபட்சமாக ரூபாய் 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 30 வரையும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ர் டூ இன்னொரு நபருக்கு பரிவர்த்தனைகள் செய்யும்பொழுது ரூபாய் இரண்டாயிரத்திற்கு கீழிருந்தால் சிறிய வணிக பரிவர்த்தனைகளுக்கு வழக்கம் போலவே எந்த ஒரு கட்டணமும் இல்லை என்றும் ரயில் கட்டணம் டெலிகாம் கட்டணம் இன்சூரன்ஸ் எரிபொருள் போன்ற அத்தியாவாசி சேவைகளுக்கு ரூபாய் 5 மட்டுமே நிலையான கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் கட்டணம் எந்த சட்ட அடிப்படையில் விதிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo