சென்னை வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான பயண கட்டணம்.
சென்னை வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை செல்லும் மெட்ரோ ரயிலை அக்டோபர் 11ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான பயண கட்டணங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பயணத்திற்கு பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் வரை செல்வதற்கு பத்து ரூபாய் கட்டணமும் பூவிருந்தவல்லி புறவழிச்சாலையில் இருந்து பூவிருந்த வழிய அரசு மருத்துவமனை கரையான் சாவடி குமணன் சாவடி காட்டுப்பாக்கம் ஆக இடைப்பட்ட நிலையங்களுக்கு இருபது ரூபாயும் பூவிருந்தவல்லி புறவழிச்சாலையில் இருந்து ஐயப்பன் தாங்கல் தெளிய ரகரம் போரூர் புறவழிச்சாலை போரூர் சந்திப்பு ஆகிய நிலையங்களுக்குச் செல்ல முப்பது ரூபாயும் வடபழனி வரை செல்வதற்கு 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பயணிகள் இரண்டாம் கட்ட மெட்ரோ பாதையில் இருந்து முதலாம் கட்ட மெட்ரோ பாதைக்கு மாரி பயணிக்கும் போது ரூபாய் 50 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுடைய பயண சீட்டுகளை க்யூ ஆர் கோடு மூலமும் சுமார்ட் கார்டு மற்றும் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் பொழுது அவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்குவது தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
Tags :



















