திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீதான வழக்கில் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது..
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை ஆதாரங்களின் அடிப்படையில் அதிமுக நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினர் இன்பத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நேரு உள்ளிட்டோர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது .அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வாக்குப்பதிவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கே. என். நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீது அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.
Tags :



















