போலி பிம்பங்களை உருவாக்கி பொய்க்கால்குதிரை  அரசு நடத்தி வரும் முதலமைச்சர் -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 08-11-2026 08:34:13am
போலி பிம்பங்களை உருவாக்கி பொய்க்கால்குதிரை  அரசு நடத்தி வரும் முதலமைச்சர் -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை பெரியார் அறிவுலக நூலக புத்தக கொள்முதல் முறைகளை சர்ச்சை தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் போலி பிம்பங்களை உருவாக்கி பொய்க்கால்குதிரை  அரசு நடத்தி வரும் முதலமைச்சர் ரோடுஷோ  நடத்துவதிலும் கேமராக்களுக்கு முன்னால் கையசைப்பது மட்டுமே கவனம் செலுத்துகிறார். தனது கொள்கை தலைவரின் பெயரில் கட்டப்பட்ட ஒரு நூலகத்தை நேரடியாக முதல்வரை திறந்து வைத்திருந்தாலும் கூட அதற்கு குறைந்தபட்ச ஆய்வை கூட இந்த அரசு செய்யவில்லை. நூலகம் திறப்பதற்கு முன்பாகவே அங்கு கொண்டுவரப்பட்ட நூல்களை முறையாக சரிபார்த்து ஆய்வு செய்து இருக்க வேண்டாமா ?என்று கேள்வியை எழுப்பி உள்ளார். முதலமைச்சர் ஏதோ சினிமா சூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் விட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடித்துவிட்டு போய் விட்டால் மட்டும் தன் கடமை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டாரா ?என்றும் இந்த முறைகேட்டில் 300 ரூபாய் கூட மதிப்பில்லாத புத்தகங்களை 1500 முதல் 2000 வரை விலை நிர்ணயம் செய்து கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாகவும் இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo