மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்பட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை- கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார்
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உள்பட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 177 டிஎம்சி காவிரி நீரை தவறாமல் திறந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கர்நாடகா தனது சொந்த நிலத்தில் அணையைக் கட்டிக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இந்த நாட்டின் சட்டத்தை மதித்து அந்த நிபந்தனையை நிறைவேற்ற தங்களுக்கு முழு கடமை உள்ளது என்றும் மேகதாது அணை கட்டப்படுவதால் கர்நாடகத்தோட தமிழ்நாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் வறட்சி காலங்களின் நீரை சேமித்து பகிர்ந்து கொள்ளும் ஒரு சமநிலை நீர் தேக்கமாக இது செயல்படும் என்றும் இந்த அணை பாசனத்திற்காக பயன்படுத்தப்படாது என்றும் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யவும் நாளொரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மட்டுமே இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள பாஜக மற்றும் என் டி ஏ கூட்டணி தலைவர்கள் என அனைவரும் கட்சி வேதம் என்று ஒற்றுமையுடன் ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு மாநிலங்களுக்கும் இடையே சண்டையிடும் காலம் முடிந்து விட்டது என்றும் மோதல் போக்கை கைவிட்டு இந்த திட்டத்தை நேரில் ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :


















